ETV Bharat / sports

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 164 ரன்கள் இலக்கு...!

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பஞ்சாப் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி
author img

By

Published : Apr 20, 2019, 9:51 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்துள்ளது.

பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெயில் 37 பந்துகளில் அரைசதம் விளாசி 69 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஏமாற்றத்தை அளித்தார், மேலும் அவரைத்தொடர்ந்து வந்த மயங்க் அகர்வால், டேவிட் மில்லர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

நான்காவது ஆட்டக்காரராக களம் இறங்கிய மந்தீப் சிங் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்களை எடுத்தார்.

ஆட்டத்தின் முதல் பாதி நிறைவடைந்த நிலையில் பஞ்சாப் அணி ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் லமிச்சானே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சார் படேல், காகிஷோ ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Intro:Body:

DC vs KXIP Toss

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.