ETV Bharat / sports

அறிமுகத்திற்கு நான் தயார்: ஆஸி.யின் புதிய சென்சேஷன் புகோவ்ஸ்...!

நான் மலையளவு பயிற்சி செய்துள்ளேன். அதனால் இப்போது தயாராக இருப்பதாக உணர்கிறேன் என இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆஸி.யின் புதிய சென்சேஷன் புகோவ்ஸ் தெரிவித்துள்ளார்.

ready-for-debut-says-will-pucovski-ahead-of-india-tests

author img

By

Published : Nov 17, 2020, 9:24 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் 5 இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் இளம் வீரர் புகோவ்ஸ் என்பவரின் ஆட்டத்தைப் பார்த்து முன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஆஸி.யின் இளம் ரிக்கி பாண்டிங் என கூறுகின்றனர்.

இதைப்பற்றி அவர் பேசுகையில், '' இது நிச்சயம் மிகப்பெரிய பயணமாக இருக்கப் போகிறது. ஆனால் இந்தப் பயணத்தின் சவாலை ஏற்க இதைவிட சிறந்த இடமும், தருணமும் அமையாது என நினைக்கிறேன்.

இந்தத் தொடரில் ஆடுவதற்காக மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பயணம் இருக்கும். என்னுடையது கொஞ்சம் வித்தியாசமானது. இரண்டு சீசன்களுக்கு முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் மனரீதியான பிரச்னை காரணமாக வெளியேற்றப்பட்டேன்.

ஆஸ்திரேலிய அணிக்காக ஆடுவதற்கு மலையளவிலான வேலையை செய்துள்ளேன். நிச்சயம் ஆடுவேன். இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தயாராக இருப்பதாகவே உணர்கிறேன்.

ஆஸி. அணியில் உள்ள பலரும் கடந்த இரண்டு வருடங்களாக சிறந்த கிரிக்கெட்டை ஆடுகிறார்கள். அதனால் பெஞ்ச்சிலும் வலிமையான வீரர்கள் இருப்பது கூடுதல் பலத்தை அளிக்கும்.

எனக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால், எந்த வரிசையில் வேண்டுமானாலும் களமிறங்கி ரன்கள் சேர்க்க முடியும். ஆஸி. அணியின் முதல் 6 வரிசையில் உள்ள வீரர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் என்னிடம் தொடர்ந்து இதுபோல் ஆடினால், நிச்சயம் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றார். அதனால் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்'' என்றார்.

இதையும் படிங்க: செரீனாவின் வாழ்க்கையை பேசும் 'Being Serena'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.