முன்னாள் ஹாம்ஷையர் கிரிக்கெட்டர் ஜான் ஹோல்டர். இவர் 11 டெஸ்ட் மற்றும் 19 ஒருநாள் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுள்ளார். 30 ஆண்டுகளாக நடுவராக உள்ள இவர், 1992ஆம் ஆண்டு முதல், முதல்தர போட்டிகளுக்கு கறுப்பின நடுவர்கள் பணியமர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி அவர் பேசுகையில், '' நான் இங்கிலாந்தில் 56 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நான் மனப்பூர்வமாக சொல்கிறேன். இதுநாள் வரை நான் இனவெறியை அனுபவத்ததில்லை. ஆனால் நடப்பவற்றை ஆராய்ந்து புரிந்துகொண்டால், வேறு முடிவை எட்டுவது கடினம். நான் ஐசிசி-க்காக பணி செய்வதை விட்டபின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் நடுவர்களுக்கு ஆலோசகராக இருக்க கோரிக்கை வைத்தேன். ஆனால் எனக்கு எந்தவொரு பதிலும் வரவில்லை.
ஆனால் வாழ்க்கையில் நடுவராக பணியாற்றாத முன்னாள் வீரர்கள் சிலர், அந்தப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது கார் ஓட்டத்தெரியாத ஒருவர், ஓட்டுநரின் ஆலோசகராக இருப்பது போன்றது.
வன்பர்ன் ஹோல்டர், வெஸ்ட் இண்டீஸிற்காக 40 டெஸ்ட், 12 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். கடைசியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் முதல்தர போட்டிகளில் நடுவராக பணியமர்த்தப்பட்ட கடைசி கறுப்பினத்தவர். அதுவும் 1992ஆம் ஆண்டில்.
எனது கேள்வி என்பது, சில இடங்களுக்கு தொடர்ந்து வெள்ளையினத்தவரை மட்டுமே பணியமர்த்துவது ஏன் என்பது தான்'' என்றார்.
இதனைத்தொடர்ந்து முன்னாள் யு -19 கிரிக்கெட் வீரர் இஸ்மாயில் தாவூத் பேசினார். அவர் நார்தாம்ப்டன்ஷைர், வொர்செஸ்டர்ஷைர், கிளாமோர்கன் மற்றும் யார்க்ஷயர் அணிக்காக விளையாடியுள்ளார். இவரின் கிரிக்கெட் வாழ்க்கை 2005ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்த நிலையில், பேனலில் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதையடுத்து நடுவராக செயல்பட முயற்சி எடுத்துள்ளார். ஆனால் அது இன்று வரை முடியவில்லை.
இதைப்பற்றி அவர் பேசுகையில், '' பல ஆண்டுகளாக நான் கேள்விப்பட்ட வார்த்தைகள் கொடூரமானது. சில வார்த்தைகள் ஈசிபி மேலாளர்கள் முன்னமே பயன்படுத்தப்பட்டது.
நான் இன பாகுபாடு, நேர்மையின்மை மற்றும் தவறான தகவல், ஒற்றுமை, கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றை எதிர்கொண்டதாக உணர்கிறேன், இவை அனைத்தும் அமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இது கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன மக்களை தனிமைப்படுத்தும் இடமாக உணர்கிறேன். இந்த அமைப்பில் இது ஆழமாக வேரூன்றியுள்ளது. இது நிறுவனமயமாக்கப்பட்ட இனவெறியாக உள்ளது. இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பாக பேசுகையில், '' இன்று சில தொழில்முறை நடுவர்கள் ஈசிபி-யின் சரியான அணுகுமுறையை பிரதிபலிக்கவில்லை. நாங்கள் இன்னும் அதிக அளவிலான கறுப்பு, சிறுபான்மை, ஆசிய மக்கள் பங்குபெற வைக்க வேண்டும் என நினைக்கிறோம். நடுவர்களுக்கான அமைப்பு உள்ளடக்கம் மற்றும் நேர்மையை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளோம்'' என்றனர்.'
இதையும் படிங்க: அறிமுகத்திற்கு நான் தயார்: ஆஸி.யின் புதிய சென்சேஷன் புகோவ்ஸ்...!