இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவந்தது. இதில் முதல் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இத்தொடரை 1-1 என சமனில் முடித்துள்ளது.
இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது மட்டுமில்லாமல் பல சாதனைகளையும் படைத்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை...
’கில்லர் மில்லர்’
- தென்னாப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் ஹர்த்திக் பாண்டியாவின் விக்கெட்டை கேட்ச் பிடித்ததின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்தவர் பட்டியலில் பாகிஸ்தானின் சோயப் மாலிக்கின் சாதனையை சமன் செய்து முதலிடம் பிடித்துள்ளார்.டேவிட் மில்லர்
- இச்சாதனையை இவர் 72ஆவது சர்வதேச டி20 போட்டியில் நிறைவுசெய்துள்ளார். இதற்கு முன் சோயப் மாலிக் இச்சாதனையை 111ஆவது டி20 போட்டியில்தான் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குவிண்டன் டி காக்
- வெளிநாட்டு தொடர்களில் விளையாடிய தென்னாப்பிரிக்க கேப்டன்களில் அதிக ரன் அடித்தவர் பட்டியலில் குவிண்டன் டி காக் இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார்.குவிண்டன் டி காக்
- மேலும் குறைந்த டி20 போட்டிகளில் விளையாடி 1000 ரன்களை கடந்தவர் பட்டியலிலும் இரண்டாம் இடம்பிடித்துள்ளார். இச்சாதனையை இவர் 37 போட்டிகளில் விளையாடி கடந்துள்ளார்.
- அதுமட்டுமில்லாமல் அணியின் கேப்டனாக விளையாடி முதல் இரண்டு போட்டிகளிலேயே இரண்டு அரைசதமடித்தவர் பட்டியலிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.