ஆசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவின் வுஹான் நகரில் நடைபெற்றுவருகிறது. அதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்துவை எதிர்த்து இந்தோனேசியாவின் சொய்ருன்னிசா (choirunnisa) மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, முதல் செட்டை 21-15 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் 21-19 எனக் கைப்பற்றி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றார். இந்தப் போட்டி 33 நிமிடங்கள் வரை நீடித்தது.