ETV Bharat / sitara

'பொங்கல் வாழ்த்து போல் கலைஞர் வாழ்த்து' - வைரமுத்து உருக்கம்

தமிழர்கள் பொங்கல் வாழ்த்து போல் கலைஞர் வாழ்த்து என சொல்லி பழக வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'பொங்கல் வாழ்த்து போல் கலைஞர் வாழ்த்து' - வைரமுத்து உருக்கம்
'பொங்கல் வாழ்த்து போல் கலைஞர் வாழ்த்து' - வைரமுத்து உருக்கம்
author img

By

Published : Jun 3, 2021, 1:19 PM IST

கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர். பாலு, உள்ளிட்டோர் சென்று மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு, அவரது குடும்பத்தினர், கலைஞரின் மகள் செல்வி அவரின் குடும்பத்தினரும் மரியாதை செலுத்தினர்.

கலைஞரும் கவிஞரும்
கலைஞரும் கவிஞரும்

கவிஞர் வைரமுத்துவும் கருணாநிதி நினைவிடம், கோபாலபுரம், சி.ஐ.டி கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைரமுத்து, "தமிழர்கள் பொங்கல் வாழ்த்து போல் கலைஞர் வாழ்த்து என சொல்லி பழக வேண்டும். தமிழை வளர்த்தவர், இனத்தை மீட்டெடுத்தவர் கலைஞர்.

முத்தமிழ் அறிஞருக்கு தமிழ் கவிஞனின் மரியாதை
முத்தமிழ் அறிஞருக்கு தமிழ் கவிஞரின் மரியாதை

அடுத்த நூற்றாண்டிலும் கலைஞர் பேசப்படுவார். எழுத்தால் தமிழில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், தமிழாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதலமைச்சர் முக ஸ்டாலின் அவரின் நீட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நாளில் கலைஞரின் புத்தகங்களை ஒருவருக்கொருவர் பரிசளித்து கொண்டாட வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஆசானின் நினைவில்
ஆசானின் நினைவில்

இதற்கிடையில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் கவிதை ஒன்றையும் வைரமுத்து வெளியிட்டுள்ளார். அந்த கவிதை

'தமிழுக்கு

ஏடு திறந்தநாள்

தமிழர்க்குச்

சூடு பிறந்தநாள்

பகுத்தறிவுக்குப்

பிள்ளை பிறந்தநாள்

பழைமை லோகம்

தள்ளிக் களைந்தநாள்

மேடை மொழிக்கு

மீசை முளைத்தநாள்

வெள்ளித் திரையில்

வீரம் விளைத்தநாள்

வள்ளுவ அய்யனை

வையம் அறிந்தநாள்

வைரமுத்துவின்

ஆசான் பிறந்தநாள்'

வைரமுத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.