ETV Bharat / sitara

ராஜன் - சந்திராவின் காதல் வாழ்கை - 'என்னடி மாயாவி' பாடல் புதுப்பித்து மறுவெளியீடு

author img

By

Published : Mar 28, 2020, 7:53 AM IST

வடசென்னை படத்தில் இரண்டு நிமிடங்கள்வரை மட்டுமே ஓடிய 'என்னடி மாயாவி' பாடலின் நீக்கப்பட்ட காட்சிகளை இணைத்து மொத்த பாடலையும் தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளனர்.

Reprise of EnnadiMaayaviNee song from #VadaChennai unveiled
Ameer and Andrea in EnnadiMaayaviNee song

சென்னை: 'வடசென்னை' படத்தில் இடம்பெற்ற 'என்னடி மாயாவி' பாடலை புதுப்பித்து படக்குழுவினர் மறு வெளியீடு செய்துள்ளனர்.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட்டானதுடன், அடுத்த பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மரண வெயிட்டிங்கை ஏற்படுத்தியிருக்கும் படம் 'வடசென்னை'.

இந்தப் படத்தில் ராஜன் என்ற பிரதான கதாபாத்திரத்தில் தோன்றும் அமீர், மற்றொரு கதாபாத்திரமான சந்திரா ஆகியோருக்குகிடையே வரும் 'என்னடி மாயாவி' என்ற காதல் பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இப்பாடலின் காட்சியமைப்பில் படகில் வைத்து அமீர் - ஆண்ட்ரியாவின் முதலிரவு நடப்பதுபோல் காட்டப்பட்டிருந்த காட்சிக்கு மீனவர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்தக் காட்சி நீக்கப்பட்டது.

அத்துடன் இப்பாடல், படத்தில் சுமார் இரண்டு நிமிடங்கள்வரை மட்டுமே ஓடக்கூடியதாக இருந்தது. இதையடுத்து பாடலில் சென்சாரின்போது கத்தரியில் சிக்கிய காட்சி, படகில் அமீர் - ஆண்ட்ரியாவுக்கு இடையேயான காதல் காட்சி உள்ளிட்ட நீக்கப்பட்ட காட்சிகளுடன் இணைத்து பாடலை புதுப்பித்து மறுவெளியீடு செய்துள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தற்போது நான்கு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் பாடல் யூடியூப்பில் லைக்ஸ்களை அள்ளிவருகிறது. மேலும், பலரும் பாடலை சமூக வலைதளங்களிலும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் இந்தப் பாடலை, பாடகர் சித்ஸ்ரீராம் பாடியிருப்பார். சந்தோஷ் நாரயணன் இசைமைத்திருந்தார்.

அன்புவின் எழுச்சிக்காக காத்திருக்கிறோம் என்று 'வடசென்னை 2' படம் மீதான தங்களது எதிர்பார்ப்பை ரசிகர்கள் வெளிபடுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் சூரி, சூர்யா ஆகியோரை வைத்து அடுத்தடுத்து படங்கள் இயக்கவுள்ளார்.

இதேபோல் நடிகர் தனுஷூம் கர்ணன், இந்திப் படம் அத்ரங்கி ரே என பிஸியாக உள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.