நடிகை டாப்ஸி பன்னு தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி கதையில் இயக்குநர் ஆகார்ஷ் குர்ணா இயக்கும் ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் ஒட்டப்பந்தய வீராங்கனையாக டாப்ஸி நடிக்கிறார். இதற்காக டாப்ஸி உடலளவிலும் மனதளவிலும் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இதற்காக உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை டாப்ஸி அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார். அந்தவகையில் தற்போது சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அதில், இந்தப் படத்தில் நடிப்பதற்காக உடல் மாற்றத்தை கதைக்காக மாற்றிவருகிறேன். இது உண்மைத்தன்மையாக இருக்கும். பள்ளி நேரத்தில் எப்போதுமே போட்டித்தன்மையுடன் இருந்ததால் இதில் நடிப்பது எனக்கு எளிதாக இருந்தது.
உடற்பயிற்சியின்போது பிரபலங்களுக்கான எந்த ஒரு சலுகையும் நான் எடுக்கவில்லை எனக் கூறினார். எட்டு நிமிடங்களுக்கு ஓடும் இந்தக் காணொலியில் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகளும் காட்டப்படுகின்றன.