ETV Bharat / sitara

ஈகோவால் 'தப்பு பண்ணிட்டேன்': சிம்பு உருக்கம் - தப்பு பண்ணிட்டேன்

நடிகர் சிம்பு பேசி பாடியிருக்கும் 'தப்பு பண்ணிட்டேன்' என்னும் பாடலின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

simbu
simbu
author img

By

Published : Jul 7, 2021, 1:53 PM IST

Updated : Jul 7, 2021, 2:01 PM IST

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 'U1 ரெக்கார்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம், 'தப்பு பண்ணிட்டேன்' என்னும் இசை வீடியோவை தயாரித்துள்ளது. அறிமுக இசையமைப்பாளர் ஏ.கே. ப்ரியன் இசையமைக்கும் இந்த வீடியோவில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் சிம்பு இப்பாடலை பாடியுள்ளார்.

விரைவில் வெளியாகும் இந்த இசை வீடியோவின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிம்பு பாடியும் பேசவும் செய்திருக்கிறார்.

டீஸரில் சிம்பு கூறியிருப்பதாவது, "பிரியப் போகிறோம்னு தெரிஞ்சு நாம யாரும் லவ்ல இறங்கிறது இல்லை. சின்ன சின்ன கோபம், பொசசிவ்னஸ், முக்கியமா ஈகோ, இது தான் எங்களைப் பிரிச்சிடுச்சு. நான் அவளை போக விட்டிருக்கக்கூடாது. அப்புறம் என்ன இதுக்கு லவ் பண்ணினேன். தப்ப அவ பண்ணல. நான், நான் பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன்" என்கிறார்.

இந்த வீடியோவில் காளிதாஸ் ஜெயராம் - மேகா ஆகாஷ் தோன்றினாலும் சிம்பு தனது காதல் கதையைத்தான் இப்படி ஃபீல் பண்ணி பேசுகிறார் என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இந்த டீஸர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: யுவன் இசையில் மீண்டும் பாடல் பாடிய சிம்பு!

Last Updated : Jul 7, 2021, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.