ETV Bharat / sitara

ஜெனிஃபர் லோபஸ் மீது வழக்குத் தொடர்ந்த புகைப்படக் கலைஞர்

author img

By

Published : Apr 22, 2020, 4:47 PM IST

முறையான அனுமதியின்றி தான் எடுத்த புகைப்படத்தை பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ் சமூக வலை தளப்பக்கத்தில் பயன்படுத்தியதாக நியூயார்க் நகரப் புகைப்பட கலைஞர் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார்.

Jennifer Lopez
Jennifer Lopez

அமெரிக்க பாடகி ஜெனிஃபர் லோபஸ் குரலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் பாடகியாக மட்டுமல்லாது, நடிகையாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

நியூயார்க் நகர புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் சாண்ட்ஸ் ஜெனிஃபர் லோபஸ் மீது அனுமதியில்லாமல், புகைப்படத்தைப் பயன்படுத்தியாகக்கூறி, வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து செய்திகள் கூறுகையில், ' நியூயார்க் நகர புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் சாண்ட்ஸால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, ஜெனிஃபர் லோபஸ் அவரது தயாரிப்பு நிறுவனமான நுயோரிகன் புரொடக்ஷன்ஸில் (Nuyorican Productions) அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர்.

ஜெனிஃபர் லோபஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கத்தில் அந்த புகைப்படத்தை, 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குள் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வழக்குரைஞர் ரிச்சர்ட் லிபோவிட்ஸ் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில், ஜெனிஃபர் லோபஸ் அந்தப் புகைப்படத்தை பதிவிடும் முன் ஸ்டீவ் சாண்ட்ஸிடம் முறையான அனுமதியோ அல்லது அந்த புகைப்படத்திற்கான விலையோ கொடுக்கமால் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார்.

எனவே அவருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் டாலரும் வழக்குரைஞர் கட்டணத்தையும் அளிக்கவேண்டும் எனப் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இந்த வழக்கு குறித்து ஜெனிஃபர் லோபஸோ அல்லது அவரது பிரதிநிதியோ இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.