ETV Bharat / sitara

முடிவுக்கு வரும் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' சகாப்தம்: வின் டீசல் அறிவிப்பு

author img

By

Published : Jun 12, 2021, 10:55 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: 'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா' படத்தை தொடர்ந்து இரண்டு படங்களுடன் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சகாப்தம் நிறைவு பெற உள்ளதாக நடிகர் வின் டீசல் தெரிவித்துள்ளார்.

Vin Diesel
Vin Diesel

உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'. கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது. இந்த திரைப்பட சீரிஸில் 'ராக்' எனப்படும் டுவெயின் ஜான்சனும் இணைய படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது. இந்த படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

'மார்வல்', 'ஹாரி பாட்டர்' போல 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' திரைப்பட வரிசைக்கும் இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தின் ஒன்பதாம் பாகம் 'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா' ஜூன் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வின் டீசல், இயக்குநர் ஜஸ்டின் லின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்.

அப்போது வின் டீசல் கூறியாதாவது, 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சாகா' இரண்டு பாகங்களுடன் முடிவடையும். அந்த படங்கள் 2023,2024ஆம் ஆண்டுகளில் வெளியாகலாம். இது முடிந்தாலும் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸின் சினிமா பிரபஞசம் தொடரும். ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் தொடர் முடியபோகிறது என நான் என் மகளிடம் கூறிய போது அவள் அழுதாள். அப்போது தான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது. இது முடிய வேண்டியது இல்லை. இதை மக்களும் உணர்வார்கள் என்று. எல்லா நல்ல விஷயங்களும் நம் வாழ்வில் நடைபெறும். ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸுக்கு என்று ஒரு ஆன்மா உண்டு. அது இனி ஓய்வெடுக்கட்டும் என்றார்.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்

இவரைத் தொடர்ந்து இயக்குநர் ஜஸ்டின் லின் கூறுகையில், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் எட்டு பாகங்களிலும் முன்னணி கதாபாத்திரமாக டொமினிக் டொரெட்டோவாக நடித்த வின் டீசலுடன், 'எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா' நிறைவு பெறுவது குறித்து நிறைய உரையாடினேன். இப்போது நாங்கள் இதனை முடிக்கும் தருணத்தில் இருக்கிறோம் என நான் நினைக்கிறேன். இரண்டு திரைப்படங்களுடன் இந்த கதபாத்திரங்களின் பயணங்கள் முடிவடைகிறது. நாங்கள் நீண்ட தூரம் பயணித்து விட்டோம் என்றார்.

'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' 2001ஆம் ஆண்டு முதல் பாகம் வெளியானது முதல் எட்டாம் பாகம் வரை உள்நாட்டு, சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் பெரிய வருமானத்தை ஈட்டியுள்ளது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தொடரின் கடைசி இரண்டு படங்கள் மட்டும் தலா ஒரு பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.