பாரதிராஜா கடைசியாக 'பொம்மலாட்டம்' என்ற படத்தை இயக்கினார். அதற்குப் பிறகு கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடித்து, இயக்கியுள்ள படம் 'மீண்டும் ஒரு மரியாதை'. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய நிலையில், ஒரு சில காரணங்களால் தாமதமானது.
முதலில் இப்படத்தை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிர்மல் குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு சலீம் படத்தை இயக்க வாய்ப்பு வந்ததால், இப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இதற்கிடையில் பாரதிராஜாவே இந்தப் படத்தை இயக்கி, நடிக்க முடிவு செய்தார்.
இதில் மவுனிகா, ஜோ மல்லூரி, ராசி நட்சத்திரா ஆகியோர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜாவை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
-
My Honour To Launch the Trailer of Legendary Director @offBharathiraja sir 's #MeendumOruMariyathai ! #MOMTrailer is here ➡https://t.co/mONDCNscrB#MOMfromFeb21 @vairamuthu @madhankarky @manojkumarb_76 @NRRaghunanthan @KabilanVai @onlynikil @saregamasouth
— Dhanush (@dhanushkraja) February 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My Honour To Launch the Trailer of Legendary Director @offBharathiraja sir 's #MeendumOruMariyathai ! #MOMTrailer is here ➡https://t.co/mONDCNscrB#MOMfromFeb21 @vairamuthu @madhankarky @manojkumarb_76 @NRRaghunanthan @KabilanVai @onlynikil @saregamasouth
— Dhanush (@dhanushkraja) February 12, 2020My Honour To Launch the Trailer of Legendary Director @offBharathiraja sir 's #MeendumOruMariyathai ! #MOMTrailer is here ➡https://t.co/mONDCNscrB#MOMfromFeb21 @vairamuthu @madhankarky @manojkumarb_76 @NRRaghunanthan @KabilanVai @onlynikil @saregamasouth
— Dhanush (@dhanushkraja) February 12, 2020
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். லண்டனில் வசிக்கும் பாரதிராஜா சில சூழ்நிலையால், அவரை சைக்கோ கொலையாளியாக போலீஸ் அறிவிக்கின்றனர். பின் அதனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் திரில்லாக காட்சி அமைப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டே படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்த்துப் போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த 1985ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில், 'முதல் மரியாதை' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க: படத்தின் பெயரை மாற்றி போஸ்டர் விட்ட பாரதிராஜா