ETV Bharat / sitara

இந்தியில் பிரமாண்டமாக வெளியாகும் சக்ரா

author img

By

Published : Feb 15, 2021, 11:44 AM IST

Updated : Feb 15, 2021, 11:54 AM IST

சைபர் க்ரைமை மையப்படுத்தி உருவாகியிருக்கும் விஷாலின் சக்ரா திரைப்படம் இந்தியிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சக்ரா
சக்ரா

விஷாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சக்ரா' திரைப்படம் கரோனா பொதுமுடக்க காலத்திற்குப் பிறகு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் படங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது.

நடிகர் விஷாலின் படங்கள், வழக்கமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும். இம்முறை முதல்முறையாக சக்ரா திரைப்படம் இந்தி மொழியிலும் 'சக்ரா கா ரக்சக்' எனும் பெயரில் வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான சக்ரா படத்தின் ட்ரெய்லர் பெரும் வரவேற்பு பெற்றது. படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பில் பாலிவுட் விநியோகஸ்தர்கள் 'சக்ரா கா ரக்சக்' படத்தினை இந்தி படத்திற்கு இணையான பெரும் எண்ணிக்கை கொண்ட திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தியில் பிரமாண்டமாக வெளியாகும் சக்ரா
இந்தியில் பிரமாண்டமாக வெளியாகும் சக்ரா
இதுகுறித்து நடிகர் விஷால் கூறியதாவது:

"தியேட்டர்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருவது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ், ஆந்திரா, தெலங்கானா மக்கள் திரைப்படங்கள் மீது கொண்டிருக்கும் காதலும் அவர்கள் தந்துவரும் ஆதரவு மிகப்பெரியது. கடின உழைப்பில், பெரும் பொருட்செலவில் சக்ரா திரைப்படத்தினை உருவாக்கியுள்ளோம். சைபர் க்ரைம் உலகினை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடியுள்ளார்கள். இந்தி விநியோகஸ்தர்களிடம் இருந்தும் பாராட்டு கிடைத்தது பெரும் நம்பிக்கையை தந்துள்ளது. தற்போது சக்ரா படத்தினை இந்தி மொழியில் வெளியிடுகிறோம். இந்தி மொழி ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.

சக்ரா படத்தினை விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் எழுதி இயக்கியுள்ளார். விஷால், ஷ்ரதா ஶ்ரீநாத், ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சக்ரா திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

Last Updated : Feb 15, 2021, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.