பாலிவுட், பிராந்திய மொழிப் படங்களில் நடித்துள்ள சுஷ்மிதா சென் முதல் முறையாக 'ஆர்யா' என்ற இணையத்தொடர் மூலமாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமானார். டச்சு தொடரான பெனோசாவின் (Penoza) அதிகாரப்பூர்வ ரீமேக்கான ஆர்யா, அக்கறையுள்ள தாயாகவும் அன்பான மனைவியாகவும் இருக்கும் ஆர்யா சரீனை (சுஷ்மிதா) சுற்றிவருகிறது.
ஆர்யாவின் கணவர் தேஜ் சரீன் (சந்திரச்சூர் சிங்). மருந்து வணிகரான தேஜ் சரீன் சந்தேகத்திற்கிடமான முறையில் கொல்லப்பட்ட பிறகு அவரது குடும்பத்திற்கு பல பிரச்சினைகள் வருகின்றன. போதைப்பொருள் கும்பல் ஒன்று அவரது குடும்பத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது.
இதைப் பார்த்த ஆர்யா அந்தக் கும்பலுடன் சேர்ந்து மாஃபியா ராணியாகி தன் கணவனைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிறார். இதற்கிடையில் அவர் தனது மூன்று குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறார்.
ராம் மத்வானி இயக்கிய இந்தத் தொடர் பன்னாட்டு விருதான எம்மிக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. இதில் சுஷ்மிதா சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் துணிச்சலாக எதிர்க்கும் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் பிரபலமானது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
தற்போது இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. ராம் மத்வானி இயக்கும் இந்தத் தொடரிலும் சுஷ்மிதாவே நடிக்கிறார். இதற்கான டீசர் இன்று வெளியானது. அதில் சுஷ்மிதா ஆக்ரோஷமாக சிவப்பு வண்ணப் பொடியை முகத்தியில் பூசியபடி காணப்படுகிறார்.
இது குறித்து சுஷ்மிதா சென் கூறுகையில், "ஆர்யாவின் அடுத்த பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கும் கும்பலிடமிருந்து ஆர்யா எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பது விறுவிறுப்பாக காண்பிக்கப்படும்.
குடும்பத்தை வாழவைப்பதற்கும் பழிவாங்குவதற்கும் இடையே ஆன பாதையில் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், ஆர்யா எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் சவால்கள் இருக்கும்" என்றார்.