மதுரை மாவட்டம் செல்லூர் தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் என்பவரின் மகன் சிவா (26).
இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமண வயதை அடையாத சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். இது தெரிந்த சிறுமியின் தந்தையார் தனது மகளை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சமயநல்லூர் கருப்பசாமி கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையே இளைஞர் சிவா, சிறுமியைப் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி துன்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் இளைஞர் சிவா மீது, போக்சோ மற்றும் குழந்தைத் திருமண தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மின்மாற்றிகளில் தாமிரக் கம்பிகள் கொள்ளை: கொள்ளையர்கள் கைது