ETV Bharat / jagte-raho

பாஜக பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய வாலிபருக்கு வலைவீச்சு..! - police search the person

சேலம்: பாரதிய ஜனதா கட்சி பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய இளைஞரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சி பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய வாலிபருக்கு வலைவீச்சு...
author img

By

Published : Aug 30, 2019, 10:53 PM IST

சேலம் மாவட்டம் சீரகாபாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டருகே நிறுத்தியிருந்த இவரது காரை இளைஞர் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியிருக்கிறார். இதனை நேற்று காலை பார்த்த சிவப்பிரகாசம் அதிர்ச்சி அடைந்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .

இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி விசாரணை செய்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காரை சுற்றி இருப்பதும் இளைஞர் ஒருவர் மட்டுமே காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதும் தெரியவந்தது . பின்னர் அந்தக் காரை சேதப்படுத்திய இளைஞர் குறித்து விசாரணை செய்தபோது, அவர் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் என்றும் அவர் தலைமறைவாகியிருக்கிறார் என்றும் தெரியவந்தது.

பாரதிய ஜனதா கட்சி பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி

இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி காவல்துறையினர், "பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சிவப்பிரகாசம் தனது காரை எப்போதும் பொதுமக்கள் வந்து செல்லும் பாதையில் நிறுத்தி வைப்பதால், அந்த வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதுகுறித்து அவரிடம் பொதுமக்கள் பலர் தெரிவித்தும் சிவப்பிரகாசம் காரை ஓரமாக நிறுத்தாமல் தொடர்ந்து பாதை மீதே நிறுத்தி வந்துள்ளார். இதில் கோபம் அடைந்த மோகன்குமார் நள்ளிரவில் காரை உடைத்து சேதப்படுத்தினார்" என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக தெரிவித்தனர்.

Intro:சேலம் அருகே பாரதிய ஜனதா கட்சி பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய வாலிபருக்கு வலைவீச்சு.Body:

சேலம் அருகே பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியின் கார் நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்டது.

இதையடுத்து வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள் .

சேலம் அருகே உள்ளது சீரகாபாடி .

இந்த பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் .
இவர் சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் .

இவர் இவரது காரை வீட்டருகே நிறுத்தியிருந்தார். அப்போது நேற்று முன்தினம் (புதன்) நள்ளிரவில் யாரோ அங்கு வந்த சிலர் காரின் கண்ணாடி மற்றும் கார் முழுவதும் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுவிட்டனர்.

இதனை நேற்று காலை பார்த்த சிவப்பிரகாசம் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .

பின்னர் போலீசார் காரை அடித்து நொறுக்கியது யாரென அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

இதில் 10க்கும் மேற்பட்டோர் காரை சுற்றி இருப்பதும் வாலிபர் ஒருவர் மட்டுமே காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதும் தெரியவந்தது .

பின்னர் அந்த வாலிபர் யார் என விசாரணை செய்தபோது அந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த மோகன் குமார் என தெரியவந்தது.

இவர் ஏன் சிவப்பிரகாசத்தின் காரை உடைத்து சேதப்படுத்தினார்? என தற்போது விசாரணை நடக்கிறது.
போலீசார் தேடுவதை அறிந்த மோகன்குமார் தலைமறைவாகிவிட்டார்.
இவரை ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் தேடி வருகிறார்கள் .

இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் தெரிவித்ததாவது
பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சிவப்பிரகாசம் தனது காரை எப்போதும் இரவு நேரத்தில் பொதுமக்கள் வந்து செல்லும் பாலம் போன்ற பகுதியில் நிறுத்தி செல்வது வழக்கம்.

இதனால் அந்த வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

இதுகுறித்து அவரிடம் பொதுமக்கள் பலரும் தெரிவித்தும் சிவப்பிரகாசம் காரை ஓரமாக நிறுத்தாமல் தொடர்ந்து பாலம் போன்ற பகுதியில் நிறுத்தி வந்துள்ளார்.

இதில் கோபமடைந்த மோகன்குமார் நள்ளிரவில் காரை உடைத்து சேதப்படுத்தி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இருப்பினும் வேறு காரணத்தால் கார் சேதப்படுத்தப் பட்டதாரி. என்றும் விசாரித்து வருகிறோம் என ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.