மாலத்தீவில் உள்ள தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த கேரஜில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய தொழிலாளிகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து இந்திய உயர் ஆணையம் அதன் ட்விட்டர் பக்கத்தில், ‘மாலத்தீவில் ஏற்பட்ட சோகமான தீ விபத்தால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இந்த விபத்தில் இந்தியர்களும் இறந்துள்ளனர் என்ற தகவல் மிகவும் வேதனையாக்கியுள்ளது. நாங்கள் மாலத்தீவில் இருக்கும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், 'மாவேயோ மசூதிக்கு அருகிலுள்ள எம். நிருஃபேஹி பகுதியில் நள்ளிரவில் 12.30 மணிக்கும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மாலத்தீவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் தீ தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த உடன் தீயணைப்புத்துறையினருடன் சம்பவயிடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டோம். அதிகாலை 04.34 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அப்போது 11 உடல்களை மீட்டோம். அதில் 8 உடல்கள் இந்தியர்களுடையது என்பதை அடையாளம் கண்டோம். 2 பேருடைய அடையாளம் குறித்து விசாரணை நடத்திவருகிறோம். இதனிடையே 2 பேர் பலத்த காயங்களுடன் இந்திரா காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!