ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதிகள் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மூலம் அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
லண்டனில் புகழ்பெற்ற எஸ்.ஓ.ஏ.எஸ். பல்கலைக்கழகத்தில் 'பாசிசத்தை எதிர்கொள்வது, ஒற்றுமை வளர்த்தெடுப்பது' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் கவிதா கிருஷ்ணன், நிடாஷா கெளல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
கவிதா கிருஷ்ணன் உரையாற்றியபோது, தடாலடியாக நிகழ்ச்சிக்குள் புகுந்த முகமூடி கும்பல் 'Gay For Kashmir' என்று முழக்கமிட்டவாறு மேடையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களின் சின்னமாக விளங்கும் வானவில் கொடிகளையும் தங்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு எதிராகப் பேசுபவர்கள், காஷ்மீரில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர் சமூகத்தினருக்க எதிரானவர்கள்" என்றனர்.