வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் நடப்பாண்டின் நிறைவில் சந்தித்துக்கொள்ளவுள்ளனர்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்தச் சந்திப்பின்போது முதன்மை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என சிஎன்பிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் சூரிச்சில் சீன உயர்மட்ட அலுவலர் யாங் ஜீச்சியை சந்தித்த பிறகு இந்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே முக்கியமான நாடுகடந்த சவால்கள் மற்றும் இரு தரப்பு உறவில் உறவில் விரிசல்கள் உள்ளன.
அந்த வகையில் ஜோ பைடன், ஜி ஜின்பிங் சந்திப்பு அரசியல் நிர்வாக ரீதியாக முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பை 3டியாக சேலையில் வடிவமைத்த நெசவாளர்