உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் ஆசிய நாடுகளில் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. போர் பாதிப்பு, பயங்கரவாதத் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள தாலிபன் அரசு, தற்போது கரோனா தாக்குதலை எதிர்கொள்வது எப்படி எனத் தவித்து வருகிறது.
அண்மையில், அமெரிக்கா - தாலிபன் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தையடுத்து, ஆப்கன் சிறையிலிருக்கும் தாலிபன் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என அந்த அமைப்பு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது.
மொத்தமுள்ள 5 ஆயிரம் கைதிகளில்; 1,500 கைதிகளை நிபந்தனையின் பேரில் தான் விடுவிக்க முடியும் என ஆப்கன் அதிபர் கனி தெரிவித்தார். இதையடுத்து, ஆப்கன் படைகள் மீது தாலிபன் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
தற்போது, கரோனா பாதிப்பு காரணமாக, ஆப்கன் தவித்து வரும் சூழலில் தாலிபன் தாக்குதலை நிறுத்த வேண்டும் என போர் நிறுத்தத்திற்கு அதிபர் கனி வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், தாக்குதலை நிறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ள தாலிபன் அமைப்பு, தங்கள் சிறைக் கைதிகளை வெளியேவிட்டு பாதுகாப்பை உறுதி செய்தால் தான், தாக்குதலை நிறுத்துவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆப்கனில் இதுவரை 1,330 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கிம் உடல்நிலை குறித்த வதந்திகள் போலியானவை - ட்ரம்ப் தகவல்