ஆப்கானிஸ்தான் கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் சோதனைச் சாவடிகள் மீது தாலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 18 தாலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் பச்சிராகம் மாவட்டத்தில் நடந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்த தாலிபான் பயங்கரவாதிகள் முயன்றனர். இந்த தாக்குதல் மூலம் தாலிபான் பயங்கரவாதிகளின் திட்டங்களை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை முறியடித்தது.
இதையும் படிங்க: முப்படைகளின் ஆயுத இறக்குமதிக்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு