மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கே.எஸ்.பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருப்பூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 836 பேர் வாக்காளர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து திருப்பூர் மாவட்டத்தில் 1 கோடியே 62 லட்சத்து 26 ஆயிரத்து 680 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு வாக்களர்களுக்கான பூத் சிலிப் மாற்றப்பட்டு புதுவடிவத்தில் வழங்கப்படவிருக்கிறது. இதில் வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக கொண்டுசெல்லக்கூடிய ஆவணங்கள் எவை எவையென அச்சடிக்கப்பட்டிருக்கும்.
ஊழியர்களுக்கான தபால் வாக்குகள்போல காவல்துறையினருக்கு தபால் வாக்குகள் அளிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்” என்றார்.