மேற்கு வங்கத்தில் ஆளும் திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் வார்த்தை போர் முதல் வன்முறை சம்பவங்கள் வரை நடந்து வருகின்றது. மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அது மேலும் அதிகரித்துள்ளது. 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்ட பாஜக தொண்டர்களை மாநிலத்தில் பதற்றத்த்தை உண்டாக்குவதாக கூறி அவர்களை மம்தா கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்ஹா, "இந்திய வரலாற்றில் முதன் முறையாக 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்டதால் அவர் மதவாதத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தை இஸ்லாம் மயமாக்க முயற்சிக்கிறார். ஆனால் மக்கள் அதனை முறியடிப்பார்கள்.
2021ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தல், மம்தாவின் அரசியல் வாழ்வை முடித்து வைக்கும். அவர் நினைத்துக் கூட பார்க்காத அளவுக்கு பாஜகவிடம் அவர் தோற்பார். மொகரத்துக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவம் ஏன் துர்கா பூஜைக்கு கொடுக்கவில்லை. அவர் இந்து மதத்திற்கு எதிராக செயல்படுகிறார்" என்றார்.