சென்னை: துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனா்.
அப்போது சென்னையைச்சேர்ந்த பயணி ஒருவர் மீது சந்தேகப்பட்ட அலுவலர்கள், அவரைத் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அப்பொழுது அவர் முன்னுக்குப்பின் முரணாகப்பேசியதை அடுத்து, அவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் ஒரு டிவிடி பிளேயருக்குள் ரூ.17.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தகடு மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர் 3.15 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்களை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தோட்ட காவலாளி மீது துப்பாக்கிச்சூடு - பழனியில் பயங்கரம்