ETV Bharat / city

‘அப்பா துரைமுருகனின் நகைச்சுவைக்கு நான்தான் முதல் ரசிகன்...’ - மனம் திறந்த கதிர் ஆனந்த்!

வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் இன்று நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

கதிர் ஆனந்த்
author img

By

Published : Apr 9, 2019, 3:16 PM IST

அப்போது நாம் அவரிடம் முன்வைத்த கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் பின் வருமாறு:

கதிர் ஆனந்த் பேட்டி
1. வேலூர் தொகுதியில் நீங்கள் வெற்றி பெற்றால் முன்னுரிமை அளித்து செயல்படுத்தக் கூடிய விஷயங்கள் எதுவாக இருக்கும்?
வேலூரில் முன்னுரிமை கொடுக்கும் விஷயம் குடிநீர் பிரச்னைதான். வேலூரின் குடிநீர் ஆதாரமே பாலாறுதான் ஆனால் போதிய மழையில்லாமல் பாலாறு வறண்டு கிடக்கிறது எனவே மாற்று நீராதாரமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. எனவே, இந்த திட்டத்தை விரிவுபடுத்தி வேலூர் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்வதே எனது முதன்மையான வேலையாக இருக்கும்.
2. தொகுதி வளர்ச்சிக்கு தங்களின் முக்கியமான திட்டங்கள் என்ன? அவை குறித்து ஒரு சில விளக்கம் யாது?
வேலூர் தொகுதியில் முக்கிய பிரச்னையே நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூர் கோட்டை மற்றும் சிஎம்சி மருத்துவமனைக்கு ஏராளமானோர் தினமும் வந்துசெல்கின்றனர். இதேபோல், வணிகர்களும் பலர் இங்கு வருகின்றனர். அவர்கள் வரும்போது ஊருக்குள் நுழைந்தவுடன் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக சிஎம்சி மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலையை கடந்துசெல்ல வசதியாக நடைமேம்பாலம் அமைத்து கொடுப்பேன். அதேபோல், பழக்கூழ் தொழிற்சாலை ஒன்றும் அங்கு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன். கே.வி.குப்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை அங்கு மருத்துவ வசதி இல்லை எனவே தாலுகா மருத்துவமணை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் குடியாத்தம் தொகுதியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர் எனவே கைத்தறி பூங்கா அமைத்து வியாபாரிகள் தங்கள் பொருட்களை எளிதில் விற்க நடவடிக்கை எடுப்பேன். வாணியம்பாடி ஆம்பூர் என்றாலே அங்கு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும் ஆனால் சமீப காலமாக ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு மக்கள் அங்கு வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர் எனவே மாற்றுத் தொழிலாக அங்கு தொழிற்பேட்டை ஒன்றை அமைத்து மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன் அதேபோல் ஆம்பூர் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்க தீர்வு காண்பேன்.
3. இந்த தேர்தலில் உங்களின் முதன்மையான முழக்கம் என்னவாக இருக்கும்?
எனது முழக்கம் என்னை பற்றி சொல்வதுதான். ஏனென்றால் நான் இந்த மண்ணின் மைந்தன். வேலூர் பகுதியில் பிறந்து மக்களோடு மக்களாக வளர்ந்தவன் நான். இறக்குமதி செய்யப்பட்டவன் அல்ல. மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறேன். வேலூரில் எந்த ஊரில் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது நன்றாக தெரிந்து வைத்திருக்கிறேன். எனவே மண்ணின் மைந்தன் எனக்கு வாக்களியுங்கள் என்பதுதான் எனது முதன்மையான முழக்கம்.
4. தங்கள் தொகுதியில் நீண்ட நெடுங்காலமாக நிறைவேற்றப்படாத திட்டங்களைத் தாங்கள் எவ்வாறு நிறைவேற்றுவீர்கள்?
குறிப்பாக, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பத்ரபலி அணைக்கட்டுத் திட்டம் நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதற்கு பணம் ஒதுக்கியும் அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் பெரிய அளவில் நீர் ஆதாரம் கிடைக்கும். எனவே, செயல்படாமல் கிடக்கும் இத்திட்டத்துக்கு தூசி தட்டி செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
5. கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதி குறித்து உங்களுக்கு ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா? தாங்கள் அந்த நிதியை எவ்வாறு செலவு செய்வீர்கள்?

நான் ஊர் ஊராக பிரசாரம் செய்யும்போது பொதுமக்கள் என்னிடம், ஏம்பா நீ இங்க வந்து இருக்க, 5 வருஷத்துக்கு முன்னாடி நாங்க ஓட்டு போட்டு தேர்வு செய்த எம்.பி எங்க போயிருக்காரு. அவர் எங்கே இருக்காருன்னு கேட்டு சொல்லு என கேட்கின்றனர். நானும் சல்லடைபோட்டு தேடுகிறேன். ஐயா உங்க ஊரு எம்பி பற்றி தெரியுமா என்று மக்களிடம் கேட்டால் யாரும் அவரை தெரியவில்லை என்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை தன் தாயைவிட பெரிதாக நினைப்பவன்தான் வாழ்க்கையில் உண்மையான சேவை செய்கிறவன் என்று நான் நம்புகிறேன், எனது அப்பாவும் நம்புகிறார். திமுகவின் கொள்கையும் அதுதான். ஆனால் தற்போது இங்கு எம்பியாக இருப்பவர் தான் வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லக்கூட தொகுதி பக்கம் சென்றது இல்லை. அப்படி இருக்கையில் அவர் எப்படி தனது மேம்பாட்டு நிதியை திட்டங்களுக்கு முறையாக செலவு செய்து இருப்பார். எனவே நான் வெற்றிபெற்றால் மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் நாடாளுமன்ற நிதி மூலம் செயல்படுத்தி கொடுப்பேன்.

6. உங்கள் தந்தை துரைமுருகன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் உள்ளார். அவர் ஒரு மிக மூத்த அரசியல்வாதி அவரிடம் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

எனது அப்பாவிடம் நான் கற்றுக் கொண்ட விஷயம், அவர் எங்கள் குடும்பத்தை பார்த்ததைவிட தொகுதி மக்களை பார்த்ததுதான் அதிகம். எங்களிடம் அவர் அதிகம் பழகியதைவிட தொகுதி மக்களிடம்தான் அதிகம் பழகி உள்ளார். நான் பிறப்பதற்கு முன்பே அவர் அரசியலில் தீவிர அரசியல்வாதியாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் திமுகவின் பிரசார பீரங்கியாக இருந்தவர். எனவே, எனது தந்தையின் தொகுதியில் பணியாற்ற எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். எனது அப்பாவிடம் கற்றுக்கொண்ட ஒரே விஷயம் வாக்களித்த மக்களுக்கு என்றும் நம்பிக்கை துரோகம் செய்யாமல் பணியாற்ற வேண்டும் என்பதுதான். எனவே நானும் என் மக்களுக்காக நம்பிக்கையோடு பணியாற்றுவேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள எனது தந்தை எனக்கு இந்த தேர்தலில் ஜாமீன் கொடுத்துள்ளார். அதாவது என் மகன் சிறப்பாக பணியாற்றுவார் இல்லை என்றால் என்னிடம் கேளுங்கள் என ஜாமீன் கொடுத்துள்ளார். எனவே அவரது நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு செயல்படுவேன்.

7. சட்டமன்றமானாலும் சரி, அரசியல் பொது மேடைகளிலும் சரி துரைமுருகன் நகைச்சுவை கலந்த பேசுவதில் சிறந்தவர். அவர் குறித்து சமூக வலைதளங்களில் அதிக மீம்ஸ் பகிரப்படுகிறது. ஒரு மகனாக உங்கள் தந்தையின் நகைச்சுவைப் பேச்சை ரசித்ததுண்டா?

நிச்சயமாக அப்பாவை ரசிக்காமல் இருந்த நாளே கிடையாது. அவரது முதல் தீவிர ரசிகன் நான்தான். அப்பா எங்கெல்லாம் பேசுகிறாரோ அதை கவனித்து அவருக்கு முன்னாடியே நான் பலரிடம் பேசி சொல்லியிருக்கிறேன். அப்பாவுடைய தீவிர ரசிகன் நான் என்றதுடன் முடித்துக்கொண்டார் கதிர் ஆனந்த்.

Intro:வேலூர் தொகுதி எம்பியை சல்லடை போட்டு தேடியும் கிடைக்கவில்லை

அப்பாவின் நகைச்சுவை பேச்சுக்கு முதல் ரசிகன் நான் தான்

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பிரத்யேக பேட்டி

Body:வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும் திமுக மூத்த தலைவருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இன்று அவரிடம் இடிவி பாரத் நிறுவனம் சிறப்பு நேர்காணல் நடத்தியது. அப்போது அவர் நாம் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு;

1. வேலூர் தொகுதியில் நீங்கள் வெற்றி பெற்றால் முன்னுரிமை அளித்து செயல்படுத்தக் கூடிய விஷயங்கள் எதுவாக இருக்கும் ?

வேலூரில் முன்னுரிமை கொடுக்கும் விஷயம் குடிநீர் பிரச்சனை தான். வேலூரின் குடிநீர் ஆதாரமே பாலாறு தான் ஆனால் போதிய மழையில்லாமல் பாலாறு வறண்டு கிடக்கிறது எனவே மாற்று நீராதாரமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது எனவே இந்த திட்டத்தை விரிவுபடுத்தி வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்வதே எனது முதன்மையான வேலையாக இருக்கும்.

2. தொகுதி வளர்ச்சிக்கு தங்களின் முக்கியமான திட்டங்கள் என்ன? அவை குறித்து ஒரு சில விளக்கம் யாது ?

வேலூர் தொகுதியில் முக்கிய பிரச்சினையே நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தான் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூர் கோட்டை மற்றும் சிஎம்சி மருத்துவமனைக்கு ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர் இதேபோல் வணிகர்களும் பலர் இங்கு வருகின்றனர் அவர்கள் வரும்போது ஊருக்குள் நுழைந்தவுடன் கசகசவென போக்குவரத்து நெருக்கடி பெரிய பிரச்சினையாக உள்ளது எனவே இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் குறிப்பாக சிஎம்சி மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல வசதியாக நடைமேம்பாலம் அமைத்து கொடுப்பேன் அதேபோல் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேளாண் பகுதியாகும் எனவே அங்கு குளிர்சாதன கிடங்கு அமைத்து கொடுப்பேன் இதன் மூலம் வியாபாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் அதே போல் பழக்கூழ் தொழிற்சாலை ஒன்றும் அங்கு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளேன். கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை அங்கு மருத்துவ வசதி இல்லை எனவே தாலுகா மருத்துவமணை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் குடியாத்தம் தொகுதியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர் எனவே கைத்தறி பூங்கா அமைத்து வியாபாரிகள் தங்கள் பொருட்களை எளிதில் விற்க நடவடிக்கை எடுப்பேன் வாணியம்பாடி ஆம்பூர் என்றாலே அங்கு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும் ஆனால் சமீப காலமாக ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு மக்கள் அங்கு வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர் எனவே மாற்றுத் தொழிலாக அங்கு தொழிற்பேட்டை ஒன்றை அமைத்து மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன் அதேபோல் ஆம்பூர் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்க தீர்வு காண்பேன்

3. இந்த தேர்தலில் உங்களின் முதன்மையான முழக்கம் என்னவாக இருக்கும்?

எனது முழக்கம் என்னை பற்றி சொல்வது தான் ஏனென்றால் நான் இந்த மண்ணின் மைந்தன் வேலூர் பகுதியில் பிறந்து மக்களோடு மக்களாக வளர்ந்தவன் நான் இறக்குமதி செய்யப்பட்டவன் அல்ல அதேபோல் வெளிநாட்டில் இருந்து செயற்கையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டவனும் அல்ல மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறேன் வேலூரில் எந்த ஊரில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பது நன்றாக தெரிந்து வைத்திருக்கிறேன் எனவே மண்ணின் மைந்தன் எனக்கு வாக்களியுங்கள் என்பது தான் எனது முதன்மையான முழக்கம்.

4. தங்கள் தொகுதியில் நீண்ட நெடுங்காலமாக நிறைவேற்றப்படாத திட்டங்களை தாங்கள் எவ்வாறு நிறைவேற்றுவீர்கள் ?

குறிப்பாக வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பத்ரபலி அணைக்கட்டுத் திட்டம் நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது அதற்கு பணம் ஒதுக்கியும் அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது இந்த திட்டத்தை நிறைவேற்றினால் பெரிய அளவில் நீர் ஆதாரம் கிடைக்கும் எனவே செயல்படாமல் கிடக்கும் இத்திட்டத்துக்கு தூசி தட்டி செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

5. கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதி குறித்து தங்களுக்கு ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா ? தாங்கள் அந்த நிதியை எவ்வாறு செலவு செய்வீர்கள் ?

நான் ஒரு ஊர் ஊராக பிரச்சாரம் செய்யும் போது பொதுமக்கள் என்னிடம், ஏம்பா நீ இங்க வந்து இருக்க, 5 வருஷத்துக்கு முன்னாடி நாங்க ஓட்டு போட்டு தேர்வு செய்த எம்பி எங்க போயிருக்காரு அவர் எங்கே இருக்காருன்னு கேட்டு சொல்லு என கேட்கின்றனர். நானும் சல்லடைபோட்டு தேடுகிறேன். ஐயா உங்க ஊரு எம்பி பற்றி தெரியுமா என்று மக்களிடம் ஆனால் யாரும் அவரை தெரியவில்லை என்கின்றனர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை தன் தாயை விட பெரிதாக நினைப்பவன் தான் வாழ்க்கையில் உண்மையான சேவை செய்கிறவன் என்று நான் நம்புகிறேன் எனது அப்பாவும் நம்புகிறார். திமுகவின் கொள்கையும் அதுதான் ஆனால் தற்போது இங்கு எம்பியாக இருப்பவர் தான் வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்லக் கூட தொகுதி பக்கம் சென்றது இல்லை அப்படி இருக்கையில் அவர் எப்படி தனது மேம்பாட்டு நிதியை திட்டங்களுக்கு முறையாக செலவு செய்து இருப்பார் எனவே நான் வெற்றி பெற்றால் மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் பாராளுமன்ற நிதி மூலம் செயல்படுத்தி கொடுப்பேன்.

6. உங்கள் தந்தை துரைமுருகன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் உள்ளார். அவர் ஒரு மிக மூத்த அரசியல்வாதி அவரிடம் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன ?

எனது அப்பாவிடம் நான் கற்றுக் கொண்ட விஷயம், அவர் எங்கள் குடும்பத்தை பார்த்ததை விட தொகுதி மக்களை பார்த்தது தான் அதிகம் எங்களிடம் அவர் அதிகம் பழகியதை விட தொகுதி மக்களிடம் தான் அதிகம் பழகி உள்ளார் நான் பிறப்பதற்கு முன்பே அவர் அரசியலில் தீவிர அரசியல்வாதியாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்தவர் எனவே எனது தந்தையின் தொகுதியில் பணியாற்ற எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன் எனது அப்பா கிட்ட கற்றுக்கொண்ட ஒரே விஷயம் வாக்களித்த மக்களுக்கு என்றும் நம்பிக்கையாக துரோகம் செய்யாமல் பணியாற்ற வேண்டும் என்பதுதான் எனவே நானும் என் மக்களுக்காக நம்பிக்கையோடு பணியாற்றுவேன் என் மீது நம்பிக்கை வைத்துள்ள எனது தந்தை எனக்கு இந்த தேர்தலில் ஜாமீன் கொடுத்துள்ளார் அதாவது என் மகன் சிறப்பாக பணியாற்றுவார் இல்லை என்றால் என்னிடம் கேளுங்கள் என ஜாமீன் கொடுத்துள்ளார் எனவே அவரது நம்பிக்கை வீண் போகாது அளவுக்கு செயல்படுவேன்.

7. சட்டமன்றமானாலும் சரி, அரசியல் பொது மேடைகளிலும் சரி துரைமுருகன் நகைச்சுவை கலந்த பேசுவதில் சிறந்தவர். அவர் குறித்து சமூக வலைதளங்களில் அதிக மீம்ஸ் போடப்படுகிறது ஒரு மகனாக உங்கள் தந்தையின் நகைச்சுவைப் பேச்சை ரசித்ததுண்டா?

நிச்சயமாக அப்பாவை ரசிக்காமல் இருந்த நாளே கிடையாது அவரது முதல் தீவிர ரசிகன் நான் தான். அப்பா எங்கெல்லாம் பேசுகிறாரோ அதை கவனித்து அவருக்கு முன்னாடியே நான் பலரிடம் பேசி சொல்லியிருக்கிறேன் அப்பாவுடைய தீவிர ரசிகன் நான்.

Conclusion:இவ்வாறு கதிர் ஆனந்த் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.