வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயா பேருந்துக்காகக் காத்திருந்தார்.
தீபாவளிப் பண்டிகை கொண்டாடிவிட்டு, பலகாரங்களை திருப்பத்தூரில் உள்ள சகோதரி வீட்டிற்கு எடுத்துச் செல்ல காத்திருந்துள்ளார். அப்போது, சென்னையிலிருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று, அங்கு நின்றிருந்த நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மீது மோதி நிலைதடுமாறி பேருந்துக்காக நின்று கொண்டிருந்த விஜயா மீது மோதியது.
#SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள் உடனுக்குடன்
இதில், விஜயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் புதருக்குள் விழுந்த காரை கிரேன் மூலம் மீட்டனர், மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காரின் ஓட்டுநர் சரவணன் என்பவரைத் தேடி வருகின்றனர்.