ETV Bharat / city

‘உப்பளங்களை கார்ப்பரேட் போல அல்ல; கூட்டுறவுச் சங்கமாக நடத்துக!’ - கனிமொழி

தூத்துக்குடி: சத்யா நகர் பகுதியில் உள்ள உப்பளங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களிடம் மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

கனிமொழி எம் பி
author img

By

Published : Sep 9, 2019, 4:53 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழைவரை, சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர். உப்பளத் தொழிலாளர்கள் தங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கைவைத்திருந்தனர்.

இதையடுத்து இன்று தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள, எம்ஜிஆர் நகர் பகுதிகளில் இருக்கும் உப்பளத்திற்கு நேரடியாகச் சென்ற கனிமொழி, அங்குள்ள தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு தடைக் காலங்களில் மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது போல, மழைக் காலங்களில் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். இதையடுத்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கனிமொழி உறுதியளித்தார்.

உப்பளங்களை பார்வையிட்ட மக்களவை உறுப்பினர் கனிமொழி

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, “தொழிலாளர்கள் மழைக்காலங்களில் தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர். திமுக ஆட்சி வந்தவுடன் இவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

உப்பள தொழிலாளர்களுக்குக் கூட்டுறவுச் சங்கம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் எனச் சொன்ன கனிமொழி உப்பளங்களைப் பெரு நிறுவனங்கள் போல் நடத்தாமல், கூட்டுறவுச் சங்கம் போல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Intro:உப்பளங்களை கார்பரேட் போல் நடத்தாமல் கூட்டுறவு சங்கமாக நடத்தவேண்டும் - கனிமொழி எம்பி பேட்டி.
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் உள்ள உப்பளங்களில் வேலை செய்யும்தொழிலாளர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, குறைகளை கேட்டறிந்தார். அப்போது மழை காலங்களில் தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை‌ விடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரை  சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி  நடைபெற்று வருகிறது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள்  வேலை செய்து  வருகின்றனர். உப்பள தொழிலாளர்கள் தங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இன்று  தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் உள்ள  உப்பளத்திற்கு  நேரடியாக சென்று கனிமொழி எம்பி ஆய்வு செய்து அங்குள்ள தொழிலாளர்களிடம்  குறைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த தொழிலாளர்கள் தங்களுக்கு தடைக்காலங்களில் மீனவர்களுக்கு நிவாரண உதவி தொகை  வழங்குவது போல் தங்களுக்கும் மழை காலங்களில் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசும்போது,
மேலும் தொழிலாளர்கள் மழைகாலங்களில்  தங்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். திமுக ஆட்சி வந்தவுடன் இவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உப்பள தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அமைக்க  மத்திய  அரசை வலியுறுத்துவோம். உப்பளங்களை கார்பரேட் கம்பெனி போல் நடத்தாமல் கூட்டுறவு சங்கம் போல் நடத்தவேண்டும் என்றார்.

பேட்டி : கனிமொழி  எம்பிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.