ETV Bharat / city

'பதவிக்காலம் முடிந்தபின் எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது அலுவலகங்களைக் காலிசெய்ய வேண்டும்'

author img

By

Published : Jul 13, 2021, 3:24 PM IST

சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிக்காலம் முடிந்த பின்பு அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள தங்களது அலுவலகங்களை உடனடியாகக் காலிசெய்து கொள்ள வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: மதுரை மக்களவை முன்னாள் உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை உடனடியாகக் காலி செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், "நான் மதுரை தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தேன்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் மதுரை கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டிட்டேன். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் எனது அலுவலகத்தில் பணம் வைத்திருப்பதாகப் பொய்ப் புகார் கொடுக்கப்பட்டதன்பேரில் மதுரை தல்லாகுளம் காவல் துறையினர், தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் சேர்ந்து எனது அலுவலகத்தில் சோதனை செய்தார்கள்.

மாநகராட்சி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தக் கட்டடத்தில் வாடகைக்கு இருப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி கட்சிப் பணிக்குப் பயன்படுத்தக் கூடாது எனக்கூறி அலுவலகம் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் சீல்வைக்கப்பட்டது.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இன்றுவரை எனது அலுவலகம் திறக்க அனுமதிக்கப்படாமல் உள்ளது. எனவே, எனது அலுவலகத்தைத் திறக்க மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசுத் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், "மனுதாரர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அலுவலகப் பணிக்காக மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது அவரது பதவிக்காலம் முடிந்துவிட்டது; இருந்தும் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து மாநகராட்சி கட்டடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, "மனுதாரர் தற்போது எந்தப் பதவியிலும் இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிக்காலம் முடிந்த பின்பு அரசுக்குச் சொந்தமான இடத்திலிருந்து காலிசெய்திருக்க வேண்டும். ஆனால் அவரது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி அலுவலகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளார்" என்றார்.

பொறுப்பான பதவியில் இருந்தவர்கள் இதுபோன்று செயல்படலாமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் இல்லை. எனவே மனுதாரர் மதுரை மாநகராட்சியின் சொந்தமான கட்டடத்தை உடனடியாகக் காலிசெய்ய வேண்டும்.

வாடகை பாக்கி இருந்தால் மாநகராட்சி அலுவலர்கள் மனுதாரரிடம் முழுமையாக வசூல்செய்ய வேண்டும். மேலும் மனுதாரருக்குச் சொந்தமான பொருள்கள் அங்கு இருந்தால் அதனை எடுத்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கி மனுவினைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: மிரட்டும் டெல்டா- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.