ETV Bharat / city

அதிமுகவின் கோட்டை தகர்கிறதா? - தேனியில் குதிரைபேரத்திற்கு வித்திட்ட 2 பதவிகள்!

தேனி: துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் உள்ள ஒன்றியங்களைத் திமுக கைப்பற்றியுள்ளது.

Is the AIADMK Fort in Theni district broken?  Theni district AIADMK of Fort  Local Body Election
Is the AIADMK Fort in Theni district broken?
author img

By

Published : Jan 4, 2020, 8:20 AM IST

Updated : Jan 4, 2020, 8:28 AM IST

தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நேற்று முன்தினம் காலையில் தொடங்கி நள்ளிரவுவரை நீடித்து நேற்று காலையில் முடிவடைந்தது.

தேனி மாவட்டத்தில் உள்ள பத்து மாவட்ட கவுன்சிலர், 98 ஒன்றிய கவுன்சிலர், 130 ஊராட்சி மன்றத் தலைவர், 1161 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆக மொத்தம் ஆயிரத்து 399 பதவிகளுக்கு மூன்றாயிரத்து 550 பேர் போட்டியிட்டனர்.

இவற்றில் பத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள், 288 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய பதவிகளுக்கு மூன்றாயிரத்து 252 போட்டியிட்டு களத்தில் மக்களைச் சந்தித்தனர்.

உள்ளாட்சி பதவிக்காலம் முடிவடைந்து நான்காண்டுகளாக காலியாக இருந்த இடங்களைக் கைப்பற்ற ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இவற்றையெல்லாம்விட தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனியாகக் களம்கண்டது.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுக கூட்டணிக்கு தேனி மாவட்டத்தில் சற்று சறுக்கலாகவே அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

மொத்தமுள்ள பத்து மாவட்ட ஒன்றிங்களில் உள்ள 98 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடங்களில், அதிமுக - 45, தேமுதிக – 3, பாஜக - 1 என ஆக மொத்தம் 49 வார்டுகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

திமுக – 40, காங்கிரஸ் - 2 என திமுக கூட்டணி 42 இடங்களையும், அமமுக – 5 வார்டுகளையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளனர்.

இதே போல 10 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான போட்டியில், அதிமுக - 7, பாஜக - 1 என அதிமுக கூட்டணி 8 இடங்களையும், திமுக இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றிவிடும் சூழல் உள்ளது. ஆனால் ஒன்றியங்களைப் பொறுத்தவரையில் மொத்தமுள்ள எட்டு ஒன்றியங்களில் தேனி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய மூன்று ஒன்றியங்களை திமுகவும், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய மூன்று ஒன்றியங்களை அதிமுகவும் தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளன.

மீதமுள்ள இரண்டு ஒன்றியங்களில் 14 வார்டுகளைக் கொண்ட கடமலை – மயிலை ஒன்றியத்தில் திமுக – 7 வார்டுகளையும், அதிமுக – 7 வார்டுகளையும் சரிசமமாகப் பிடித்துள்ளன.

இதனால் இந்த ஒன்றியத்தில், தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இந்த ஒன்றியத்தை கைப்பற்றுவதில் இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதி திமுக வசம் சென்றுவிட்டது. இதனால் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து கடமலை - மயிலை ஒன்றியத்தையும் எப்படியாவது கைப்பற்றுவதற்கு ஆளும் அதிமுக முனைப்பு காட்டிவருகிறது.

இதேபோல துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 வார்டுகளில், அதிமுக – 6, திமுக – 5, அமமுக – 1, சுயேச்சை – 1 இடங்களைப் பிடித்துள்ளன.

இதில் ஒன்றியத் தலைவர் பதவிக்கு அதிமுக போட்டியிடும் பட்சத்தில், ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவை திமுக பெற்றால் இரண்டு கட்சிகளும் சரிசமமான பலத்தை பெற்றுவிடும்.

எனவே எஞ்சிய ஒரு உறுப்பினரான அமுமுக வேட்பாளர் ஆதரவு கிடைக்கும் கட்சிக்கே ஒன்றியத் தலைவர் பதவி கிடைக்கும். இதனால் போடி ஒன்றியத்தில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு குதிரைபேரம் நடப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

ஏனென்றால் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் ஒன்றியம், தொகுதியான போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்னமனூர் ஒன்றியம், தேனி ஒன்றியம் ஆகிய மூன்று ஒன்றியங்களைத் திமுக கைப்பற்றிவிட்டது.

எனவே எஞ்சியுள்ள போடி ஒன்றியத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆளும் அதிமுகவும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் செயல்பட்டுவருவதாகத் தெரிகிறது.

அந்த வகையில், வரும் ஜனவரி 11ஆம் தேதியன்று நடைபெறும் மறைமுகத் தேர்தலில் போடி, கடமலை – மயிலை ஒன்றியங்களை யார்? கைப்பற்றுவது எனத் தெரியவரும்.

இதையும் படிங்க: 70 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை மாற்றிய ஸ்டாலின்

Intro:         ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்.! தேனி மாவட்டத்தில் அதிமுகவின் கோட்டை தகர்கிறதா?
         துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் சொந்த ஊர் மற்றும் தொகுதிக்குட்பட்ட ஒன்றியங்களை கைப்பற்றிய திமுக.!
Body: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நேற்று காலையில் தொடங்கி நள்ளிரவு வரை நீடித்து இன்று அதிகாலையில் முடிவடைந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள 10 மாவட்ட கவுன்சிலர், 98ஒன்றிய கவுன்சிலர், 130 கிராம ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் 1161 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆக மொத்தம் 1399 பதவிகளுக்கு 3550பேர் போட்;டியிட்டனர். இவற்றில் 10 ஊராட்சி மன்றத்தலைவர்கள், 288 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய பதவிகளுக்கு 3252 போட்டியிட்டு களத்தில் மக்களை சந்தித்தனர்.
         உள்ளாட்சி பதவிக்காலம் முடிவடைந்து நான்காண்டுகளாக காலியாக இருந்த இடங்களை கைப்பற்றுவதற்று ஆளும் அதிமுக, எதிர்கட்சியான திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இவற்றையெல்லாம் விட தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் திமுக கூட்டணயில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனியாக களம் கண்டது.
         இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுக கூட்டணிக்கு தேனி மாவட்டத்தில் சற்று சறுக்கலாகவே அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். மொத்தமுள்ள 8 ஒன்றிங்களில் உள்ள 98 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடங்களில், அதிமுக - 45, தேமுதிக – 3, பாஜக - 1 என ஆக மொத்தம் 49 வார்டுகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. திமுக – 40, காங்கிரஸ் - 2 என திமுக கூட்டணி 42 இடங்களையும், அமமுக – 5 வார்டுகளையும், சுயேட்சைகள் 2 இடங்களையும் பிடித்துள்ளனர்.
இதே போல 10 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான போட்டியில், அதிமுக - 7, பாஜக - 1 என அதிமுக கூட்டணி 8 இடங்களையும், திமுக 2வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன. இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றிவிடும் சூழல் உள்ளது.
ஆனால் ஒன்றியங்களை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 8ஒன்றியங்களில் தேனி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய 3ஒன்றியங்களை திமுகவும், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய 3 ஒன்றியங்களை அதிமுகவும் தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 2 ஒன்றியங்களில் 14வார்டுகளை கொண்ட கடமலை – மயிலை ஒன்றியத்தில் திமுக – 7 வார்டுகளையும், அதிமுக – 7 வார்டுகளையும் சரிசமமாக பிடித்துள்ளது. இதனால் இந்த ஒன்றியத்தில், தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட இந்த ஒன்றியத்தை கைப்பற்றுவதில் இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 23ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதி திமுக வசம் சென்றுவிட்;டது. இதனால் தற்போது நடைடபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடமலை - மயிலை ஒன்றியத்தையும் எப்படியாவது கைப்பற்றுவதற்கு ஆளும் அதிமுக முனைப்பு காட்டி வருகிறது.
இதே போல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13வார்டுகளில், அதிமுக – 6, திமுக – 5, அமமுக – 1 மற்றும் சுயேட்சை – 1 இடங்களை பிடித்துள்ளது. இதில் ஒன்றியத்தலைவர் பதவிக்கு அதிமுக போட்டியிடும் பட்சத்தில், 1சுயேட்சை உறுப்பினரின் ஆதரவை திமுக பெற்றால் இரண்டு கட்சிகளும் சரிசமமான பலத்தை பெற்றுவிடும். எனவே எஞ்சிய 1உறுப்பினரான அமுமுக வேட்பாளார் ஆதரவு கிடைக்கும் கட்சிக்கே ஒன்றியத்தலைவர் பதவி கிடைக்கும். இதனால் போடி ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு குதிரை பேரம் நடப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் ஒன்றியம், தொகுதியான போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னமனூர் ஒன்றியம் மற்றும் தேனி ஒன்றியம் ஆகிய 3 ஒன்றியங்களை திமுக கைப்பற்றிவிட்டது. எனவே எஞ்சியுள்ள போடி ஒன்றியத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற முணைப்பில் ஆளும் அதிமுகவும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களும் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
Conclusion: வரும் ஜனவரி 11ஆம் தேதியன்று நடைபெறும் மறைமுக தேர்தலில் போடி, கடமலை – மயிலை ஒன்றியங்களை யார்? கைப்பற்றுவது எனத் தெரியவரும்.
Last Updated : Jan 4, 2020, 8:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.