மதுரையில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அசோக் குமார் (61) என்பவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அசோக் குமார் மூளைச்சாவு அடைந்ததாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து மூளைச்சாவு அடைந்த அசோக் குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். ஈரோடு கல்யாணி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரகம் செயலிழப்பு காரணமாக தங்கமணி (53) என்பவர் சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார்.
2019ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழ்நாடு மாற்று உறுப்பு மையத்தில் பதிவுசெய்து வைத்திருந்ததால் வரிசை அடிப்படையில் மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் தங்கமணிக்குப் பொருத்த முடிவுசெய்யப்பட்டது.
மருத்துவர்களின் அனைத்து பரிசோதனைக்குப் பின்பு மதுரையிலிருந்து தனியார் அவசர ஊர்தி மூலமாக ஈரோட்டுக்கு 203 கிலோ மீட்டரை 3 மணி நேரத்தில் கொண்டுவரப்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
இதையும் படிங்க: பாஜகவின் இன்னொரு முகமே ரஜினி - தொல். திருமாவளவன்