கோவை: காந்திபுரத்தில் தனியார் நகைக் கடைக்கு நேற்று முன்தினம் ஜனவரி 11ஆம் தேதி, வாடிக்கையாளர் போல் வந்த இருவர், குழந்தைகளுக்கு நகை வாங்குவது போன்று மோதிரங்களை திருடிச் சென்றனர்..
இதனை அறிந்த ஊழியர் 43 ஆயிரம் மதிப்புள்ள 14 தங்க மோதிரங்கள் மாயமானதாக மேலாளருக்குத் தகவல் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இரண்டு நபர்கள் மோதிரங்கள் வாங்குவது போல் நடித்து, கைக்குட்டையால் மறைத்து மோதிரங்களை திருடிச்செல்வது தெரியவந்தது.
இதுதொடர்பாக கடையின் மேலாளர் ஸ்டான்லி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மோதிரங்களை திருடிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஸ்டாலின் மனு