கோயம்புத்தூர்: Pollachi: பொள்ளாச்சி நகரிலுள்ள புதிய பேருந்து நிலையம் முன்பு கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் எம்ஜிஆர் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன், நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்களான ஜேம்ஸ் ராஜா, வசந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி சூளேஸ்வரன்பட்டியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கார்த்தி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் இளஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 'மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், சிறுவர் முதல் முதியவர் வரை எல்லலோருக்கும் பிடித்த தலைவர். தன் வாழ்நாளில் சினிமாவில் சம்பாதித்த பணத்தை, தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கினார்.
எம்ஜிஆரின் நினைவு நாளில், அஇஅதிமுக தலைவர் முதல், தொண்டர்கள் வரை தமிழ்நாட்டில் ஆளும் லஞ்ச ஊழல் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திமுகவினரின் கைப்பாவையாக காவல் துறையினர் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
சில தினங்கள் முன்பு கோதவாடிகுளம் திமுகவினர் அதகளம் செய்தார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் என் மீதும், என் தோழர்கள் மீதும் பொய் வழக்குப்போட்டுள்ளனர். அதனை நான் சட்டப்படி சந்திப்பேன். முன் ஜாமீன் கோர மாட்டேன்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Rashtra Sevika Samiti: ராஷ்டிரிய சேவிகா சமிதி பயிற்சி முகாமிற்கு தடை விதிக்கக் கோரி மனு