தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனால் பரிந்துரை செய்யப்பட்டு பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, பொள்ளாச்சி (கிழக்கு ) ஒன்றியம், அனுப்பர்பாளையம் ஊராட்சி, அனுப்பர்பாளையம் கிராமத்தில் புதிதாக ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க சட்டப்பேரவை துணைத் தலைவரால் பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வட்டாட்சியர் தணிகைவேல், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் தம்பு(எ)தாமோதரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்டக் கழக துணைச் செயலாளருமான ராதாமணி, ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.