ETV Bharat / city

கூட்டாளிகளை காட்டிக் கொடுத்த திருடர்கள்... திருடியதை மொத்தமாக கைப்பற்றிய போலீஸ்...

கோயம்புத்தூர்: பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்தனர்.

4 theft arrested at pollachi
4 theft arrested at pollachi
author img

By

Published : Dec 14, 2020, 9:59 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சியில் பழைய குற்ற வழக்குகளின் குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க காவல்துறை உயர் அலுவலர்கள் உத்தரவிட்டனர். தொடர்ந்து பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதனிடையே, பொள்ளாச்சி வஞ்சியாபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த சூர்யஜெகதீஸ், ரகுபதி ஆகியோரை பிடித்து விசாரனை மேற்கொண்ட போது அவர்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மெல்லீஸ்வரன், வெற்றிநாதன் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில் பொள்ளாச்சி, நெகமம், கோவை சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆம்னி கார், இருசக்கர வாகனங்கள், 13 சவரன் நகைகள் ஆகியவற்றை திருடியது கண்டறியப்பட்டது.

அவர்களிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பொருள்களை மீட்ட காவல் துறையினர், பொள்ளாச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.