சென்னை மெட்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் (கணக்கு), உதவியாளர் (ஆவண நிர்வாகப்பணி) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது.
உதவியாளர் (கணக்கு) - 02
இந்தப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களுடன் வணிகவியல் துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் (ஆவண நிர்வாகப்பணி ) - 01
இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை.
நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-052019.pd என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.