ETV Bharat / city

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்

author img

By

Published : Jun 30, 2021, 6:58 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்..

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்

1. நாளை முதல் ரேசனில் மீண்டும் கைரேகை

ரேசன் கடைகளில் நாளை முதல் (ஜுலை1) மீண்டும் கைரேகை பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது.

2. வீட்டுவசதி துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் - அமைச்சர் சு.முத்துசாமி

வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வீட்டுவசதி துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளோம் என வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

3. கல்லூரிகள் திறப்பு எப்போது ? - உயர்கல்வித்துறை அமைச்சர் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

4. நாளை முதல் கட்டணம் - பாரத் ஸ்டேட் வங்கி அறிவிப்பு

பாரத் ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இனி மாதம் நான்கு இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொண்டால் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

6. கரோனா இழப்பீடு தாமதம் ஏன்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

கரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிப்பது கட்டாயம், அதற்கான வழிமுறைகளை ஆறு வாரத்திற்குள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. ’சாதாரண மனிதனின் வாழ்வை தொழில்நுட்பத்தால் சுமூகமானதாக்க வேண்டும்’ - குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

"தொழில்நுட்பங்களை, ‘கருத்துருக்களின் ஆதாரமாக' மட்டுமே கருதக்கூடாது. தொழில்நுட்பத்தால் மனிதனின் துயரத்தைக் களைந்து, சாதாரண மனிதனின் வாழ்கையை சுமூகமானதாகவும் மாற்ற முடியும். எந்த ஒரு ஆராய்ச்சியின் இறுதி நோக்கமும் அதுதான்" என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

8. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி அரசு ஜூலை 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது. கடற்கரை, பூங்கா இரவு 9 மணிவரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

9. சியான் 60: தடுப்பூசி எடுத்துக்கொண்ட படக்குழு!

சியான் 60 படக்குழுவினர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

10. மிதாலி, அஸ்வின் கேல் ரத்னாவுக்கு பரிந்துரை; அர்ஜுனா பட்டியலில் தவான்

முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.