ETV Bharat / city

ஆளுநர் கார் மீது கற்கள் வீசப்பட்டதா? - தமிழ்நாடு காவல்துறை விளக்கம் - தமிழ்நாடு காவல்துறை

மயிலாடுதுறையில் ஆளுநர் கார் மீது கற்கள் வீசியதாக வரும் தகவல் உண்மையில்லை என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை
author img

By

Published : Apr 20, 2022, 7:33 AM IST

Updated : Apr 20, 2022, 8:00 AM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (ஏப்.19) மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க காரில் சென்றார். அப்போது மன்னம்பந்தல் தனியார் கல்லூரிக்கு அருகே வடகரை சாலையில் கார் சென்ற போது சிபிஐ மாவட்ட செயலாளர் சீனிவாசன், தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் மகேஷ், மீத்தேன் எதிர்ப்பு குழு எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 75 பேர் கையில் கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியாத விரக்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கருப்பு கொடிகளை தூக்கி வீசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் ஆளுநருக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும் எனவும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கொடி வீசப்பட்டதாக கூறும் தகவல் உண்மையில்லை என தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஆளுநர் பாதுகாப்பிற்காக மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 2 காவல்துறை துணை தலைவர்கள், 6 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 21 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,120 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளுநரின் கார் மற்றும் அவரது கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்தனர்.

வீசிய கொடி காவல் அதிகாரிகளின் காரில் மீது மட்டுமே பட்டது. உடனே பாதுகாப்பிற்காக இருந்த காவலர்கள் கொடிகளை கைப்பற்றி, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றினர். கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 2 சூரியன்கள் ஆள்கின்றன - தருமபுரம் ஆதீனம்; இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன் - ஆளுநர்!

Last Updated : Apr 20, 2022, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.