சென்னை: நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பொன்ராஜ். கடந்த 3 ஆம் தேதி இரவு நந்தம்பாக்கம் பட்ரோட்டில் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மடக்க முயன்றார். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் நிற்காமல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. . இந்த விபத்தில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பொன்ராஜை அருகிலிருந்த காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இந்த விபத்து தொடர்பாக மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மூலம் ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறி: இருவர் கைது