இந்திய நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டிற்கு விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த தமீம் அன்சாரி, இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராஜன், பாகிஸ்தான் அதிகாரி அமிர் ஜுபைர் சித்திக், முகமது அன்வர், முகமது சித்திக் உள்ளிட்டோர் மீது திருச்சி கியூ பிரிவு காவல் துறையினர் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குப் பின்னர் தேசிய புலனாய்வு துறையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் தமீம் அன்சாரி மற்றும் அருண் செல்வராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் சென்னை தேசியப் புலனாய்வுத்துறை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அதில், “உள்நாட்டுத் தகவல்களை திருடி வெளி நாடுகளுக்கு விற்க முயற்சி செய்த குற்றத்துக்காக அருண் செல்வராஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமீம் அன்சாரி மீதான வழக்கில் விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள முகம்மது அன்வர், முகமது சிராஜ் அலி மற்றும் அமிர் ஜுபைர் சித்திக் ஆகியோரைக் காவலர்கள் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ராஜபாளையத்தில் காவலர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை