சென்னை: கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற ஒரு நீதிபதி கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதி கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அப்பொழுது ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது, இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முன்பே, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவானது தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
ஓ.பன்னீர்செல்வத்தின் திட்டத்தை முன்பே கணித்திருந்த எடப்பாடி பழனிசாமி முதலில் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். ஏற்கெனவே, அதிமுக பொதுக்குழு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் முன்பு நடந்தபொழுது, இனி சென்னை உயர் நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும், இங்கு வர வேண்டாம் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்பொழுது சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்காக உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளுமா? என சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: 'உங்கள் எண்ணப்படியே நடக்கும்' - சித்தர்போல் பேசிவிட்டுச்சென்ற ஓ.பன்னீர்செல்வம்