மத்தியப் பிரதேசத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 6 பேருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 6 பேருக்கும் டெல்டா வகை கரோனாவின் புதிய உருமாறிய ஏஒய்.4 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் தனிமைப்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், "பிரிட்டனில் புதிதாக உருமாறிய கரோனா தொற்று தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
இது மிகவும் ஆபத்தான வைரஸ் என்பதால், மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும். மக்கள் கூடும் இடங்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல்கள் கடைபிடிக்க வேண்டும். அடுத்து வரக்கூடிய 2 மாதங்கள் சுகாதாரத்துறைக்கு சவாலான மாதங்கள். முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட மத்திய, மாநில அரசின் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 6 வாரங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் பின்பற்றுங்கள் - ராதாகிருஷ்ணன்