சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வார காலம் அவகாசம் இருப்பதால், ஓய்வு எடுப்பதற்காக ஒரு வார கால பயணமாக கொடைக்கானல் புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். உடன் மனைவி, மகன் உதயநிதி, மகள் செந்தாமரை மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்ப உறுப்பினர்களும் சென்றனர்.