ETV Bharat / city

நீட் தேர்வில் விலக்குப் பெற சட்டம் இயற்றப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Minister Ma. subramanian

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளார். அந்தக் குழுவின் அறிக்கை வந்த பின்னர், குழுவின் அறிக்கையுடன் சேர்த்து, தீர்மானம் இயற்றி அனுப்பினால் அதற்கு வலுக்கிடைக்கும் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு பெற்று தருவார் என கூறினார்.

Minister Ma. subramanian about neet
Minister Ma. subramanian about neet
author img

By

Published : Jun 21, 2021, 12:06 PM IST

சென்னை: நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை வந்த பின்னர், நீட்டிற்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் இயற்றி ஒன்றிய அரசிற்கு அனுப்பப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை ஐந்து விளக்கு ஆலந்தூர் சாலையில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் கழிவுநீர் பாதையில் உள்ள அடைப்புகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி அகற்றும் பணியினை தொடங்கி வைத்தார்.

நீட் தேர்வில் விலக்குப் பெற சட்டம் இயற்றப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் பாதாளச் சாக்கடை தூர்வாரும் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டில் இந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டன. தற்பொழுது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் சார்பில் 454 இயந்திரங்கள் மூலம் 4200 கிலோ மீட்டர் பாதாள சாக்கடையை தூர்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால், வாய்க்காலை தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் எல்லாப் பகுதியிலும் அடைப்புகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் மழைநீர் காலங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மழைநீர் கால்வாய் கட்டும் பணியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை கண்டறிந்து சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து வருகிறார். மழைக்காலத்திற்கு முன்னர் முடிப்பதற்காக பணிகள் விரைந்து நடைபெறுகின்றன.

கரோனா முதல் அலை, 2ஆவது அலை, அடுத்து வரும் அலையானாலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுதல், தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த 4 வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால், எந்த அலையும் ஒன்றும் செய்யாது.

கரோனா அல்லது எந்த வைரஸ் தாக்கமாக இருந்தாலும், அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழி தடுப்பூசி. அந்த தடுப்பூசியை கூடுதலாக கேட்டு பெற்று போடுவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சிறிய மாவட்டங்களில் போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மிக விரைவில் 75 சதவீதம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே அதனை பெற்று தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவோம்.

தமிழ்நாட்டில் நீட்டிற்கு எதிரான தீர்மானம் மட்டுமே தீர்வாகாது. ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். ஆனால், ஒன்றிய அரசு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டது. அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு 2006-இல் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் அப்போதைய முதலைமச்சர் கருணாநிதியால் நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

அதேபோல் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளார். அந்தக் குழுவின் அறிக்கை வந்த பின்னர், குழுவின் அறிக்கையுடன் சேர்த்து, தீர்மானம் இயற்றி அனுப்பினால் அதற்கு வலுக்கிடைக்கும் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு பெற்று தருவார் என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.