ETV Bharat / city

'தெலுங்கில்' பேசிய திமுக எம்எல்ஏ; 'தமிழிலே மாட்டலாட' சொன்ன ஜெயக்குமார்!

சென்னை: சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தின் போது, திமுக எம்எல்ஏ ஒருவர் தெலுங்கில் பேசியது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

assembly
author img

By

Published : Jul 12, 2019, 7:55 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய தளி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரகாஷ், பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தமிழில் பேசி வந்தார். அவர் தீடீரென தனது தொகுதி பிரச்சினை குறித்து தெலுங்கில் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், "மொழிமாற்றம் செய்யும் வசதி இல்லை. எல்லோருக்கும் புரியம் வகையில் தமிழில் பேசுங்கள். நீங்கல் பேசியது அவை குறிப்பிலும் பதிவாகாது" என்றார். பின்னர் எம்எல்ஏ பிரகாஷ் மீண்டும் தெலுங்கில் பிரகாஷ் பேச முற்பட்டபோது, அமைச்சர் ஜெயக்குமார் குறுகிட்டு "மறைந்த முதலமைச்சருக்கு பல மொழிகள் தெரியும். எங்களுக்கு தெரியாது. அதனால் நீங்களும் தமிழிலே மாட்டலாடு" என்று தெலுங்கு கலந்த தமிழில் வலியுறுத்தினார்.

இதையடுத்து திமுக உறுப்பினர் பிரகாஷ், "தனது தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் பல மொழிகளில் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்கள் அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு படிப்பவர்கள் தேர்வு எழுத மிகவும் சிரமப்படுகிறார்கள். அங்குள்ள பல்வேறு அமைப்புகளை அழைத்து பேசி, பள்ளிகல்வித் துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "சிறுபான்மையினர் அவர்களின் மொழியிலே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே பள்ளிகளில் பயிலும் பிற மொழி மாணவர்கள் குறித்த விபரத்தை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

திமுக உறுப்பினர் இதுபோன்று தெலுங்கில் பேசுவது இது முதல் முறையல்ல. முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்தொடரின்போதும் அவர் தெலுங்கில் பேசியிருந்தார். அப்போதும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

Intro:Body:மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய தளி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், பல்வேறு பிரச்சினைகளை தமிழில் பேசி வந்தார். தீடீரென தெலுங்கில் தனது தொகுதி பிரச்சினை குறித்து பேசினார். அப்போது சபாநாயகர் குறிக்கிட்டு மொழிமாற்றம் செய்யும் வசதி இல்லை. நீங்கல் பேசியது அவை குறிப்பிலும் பதிவாகாது. எனவே எல்லோருக்கும் புரியம் வகையில் தமிழில் பேசுங்கள் என்றார். மீண்டும் தெலுங்கில் பிரகாஷ் பேச முன்பட்டபோது, அமைசச்ர் ஜெயக்குமார் குறுகிட்டு மறைந்து முதல்வருக்கு பல மொழிகள் தெரியும் எங்களுக்கு தெரியாது. அதனால் நீங்களும் தமிழிலே மாட்டலாடு என்று தெலுங்கு கலந்த தமிழில் உறுப்பினரிடம் வலியுறுத்தினார். இதேயடுத்து சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், தனது தொகுதியில் தமிழ் தெலுங்கு கன்னடம் என்று 4 மொழிகளில் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்கள் அதிலும் 10 வகுப்பு படிப்பவர்கள் பரிட்சை எழுத மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்குள்ள பல்வேறு அமைப்புகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கையை பள்ளிகல்வி துறை அமைச்சர் எடுக்கவேண்டும் என்று தமிழில் பேசி கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், சிறுபான்மையினர் அவர்கள் மொழியிலே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். எத்தனை பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள் என்று தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.