சென்னை: சமூக நலன் - மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள், 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாகத் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மூன்று உதவி இயக்குநர்கள், ஏழு குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை ஸ்டாலின் வழங்கினார்.
குழந்தைகள், மகளிர், மூத்தக் குடிமக்கள், திருநங்கைகள் போன்ற சமூகத்தின் நலிவுற்றப் பிரிவினரின் நலனுக்கென சமூக நலன் - மகளிர் உரிமைத் துறையின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்துறையின் சமூக நலத் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தும்பொருட்டு மாவட்ட அளவில் உதவி இயக்குநர் நிலையில் மாவட்ட சமூக நல அலுவலர்கள், மாவட்ட திட்ட அலுவலர்களும், வட்டார அளவில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்களும் பணிபுரிந்துவருகின்றனர்.
அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து செயல்பட்டுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறையில் 13 உதவி இயக்குநர்கள், 86 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாகத் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்படுவது தொடர்பான ஆய்வு - சென்னைக்கு 8வது இடம்