சென்னை: Chennai IIT IDDD plan: சென்னை ஐஐடியில் மின்சார வாகனங்கள் குறித்து பிடெக் மாணவர்களுக்கு இடைநிலை இரட்டைப் பட்டம் (IDDD) வழங்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு மின்சார வாகனங்கள் மீதான ஈடுபாட்டை அதிகரிக்க முடிவதுடன், பிடெக், இரட்டைப் பட்டப்படிப்பும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தினால் மின்சார வாகனங்கள் துறையில் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்த முடியும்.
ஐஐடியில் பிடெக் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர்கள் இரட்டை டிகிரி திட்டங்களின்கீழ் ஜனவரி 2022 முதல் சேருவார்கள். முதற்கட்டமாக 25 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்துவது குறித்து கற்பிக்கப்படும். இதனால் அவர்கள் படிப்பை முடித்தவுடன் வேலைக்குச் செல்லலாம் அல்லது உயர் படிப்பிற்கும் செல்லலாம் எனச் சென்னை ஐஐடியின் டிசைன் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் சங்கர்ராம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை