ETV Bharat / city

மாணவர்களின் நலனுக்காக மின் இணைப்பை துண்டிக்க கால அவகாசம் நீட்டிப்பு - பெத்தேல் நகர் குடியிருப்பு பிரச்சனை

மாணவர்களின் கல்வி, தேர்வு காரணமாக பெத்தேல் நகர்ப் பகுதி குடியிருப்புகளுக்கான மின் இணைப்பைத் துண்டிப்பதற்கு கல்வியாண்டு முடியும் வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jan 31, 2022, 7:33 PM IST

சென்னை: ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்பை அகற்றும்படி, 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி ஐ.ஹெச். சேகர் என்பவர் தாக்கல்செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அரசு கோரிக்கை

அப்போது, கரோனா காலகட்டம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன், அவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, வீடுகளுக்கான மின் இணைப்பைத் துண்டிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென அரசுத் தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது.

அதேபோல், ஆக்கிரமிப்பு அகற்ற பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி பெத்தேல் நகர் பொதுமக்கள் தரப்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.

இந்த வழக்குகள், பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. இதில் வழக்கில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர்.

வணிக நிறுவனங்களின் மின் இணைப்புத் துண்டிப்பு

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், இதுவரை 153 கடைகளில் 107 கடைகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது எனவும், அனைத்து வணிக நிறுவனங்களின் இணைப்பு இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்குள் சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வீட்டுக்கான இணைப்பு வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதால் வணிக நிறுவனங்களின் இணைப்பைத் துண்டிப்பதில் சிக்கல் உள்ளதாகத் தெரிவித்தார். இதற்கு, வீட்டு இணைப்புகளை வணிகப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதே விதிமீறல் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, பெத்தேல் நகர் பொதுமக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெத்தேல் நகரில் 3,500 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் என்றும், இப்பகுதியை மேம்படுத்த 100 கோடி ரூபாயை அரசு செலவு செய்துள்ளதாகவும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால், 25 ஆண்டுகளுக்கும் மேல் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் வாதிட்டார்.

கூடுதல் அவகாசம் உத்தரவு

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மேய்க்கால் புறம்போக்கு நிலத்துக்குப் பதிலாக, அரசு மாற்று இடம் வழங்கியுள்ளதாகவும், பெத்தேல் நகர் பகுதி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, குடியிருப்பு நிலமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அந்தப் பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, வணிக நிறுவனங்களுக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களின் படிப்பு, தேர்வுகளைக் கருத்திற்கொண்டு குடியிருப்பு கட்டடங்களுக்கான மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கல்வியாண்டு முடியும் வரை அரசுக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

அதேசமயம், வணிக நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர அனுமதியளித்த நீதிபதிகள், அரசு கொள்கை அடிப்படையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக அப்பகுதியில் உள்ள உண்மை ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை அரசு தலைமை வழக்கறிஞருக்கு ஏழு நாள்களில் வழங்க வேண்டும் என பெத்தேல் நகர் மக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்பு நிலங்களை வரன்முறை செய்ய அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 'எனக்கும் ஒருமையில் பேசத்தெரியும்' - வார்டு பங்கீட்டில் இருந்து கடுப்பாக வெளியேறிய ஜோதிமணி எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.