சென்னை: தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வந்த நிலையில், பள்ளிகளில் தேர்தலையொட்டி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுவதால் தற்போது மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் மறுநாள் முதல் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற உள்ளன.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன்பின், தொடர்ச்சியாக 10 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. பின்னர் மே 3 முதல் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.