தங்கத்தை ஆபரண பொருளாக பார்ப்பவர்களை விட முதலீடாக பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு தங்கம் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்த நிலையில், ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே உள்ளது.
மேலும் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் வரலாறு காணாத வகையில் 4 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் அதிகரித்து கிராம் ஒன்றுக்கு நான்காயிரத்து ஐம்பத்து ஒரு ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
நேற்றைய நிலவரப்படி 31 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று ஒரே நாளில் 584 ரூபாய் அதிகரித்ததன் காரணமாக 32 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளி விலையும் கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் 52 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 4 ஆயிரத்தை தொட்ட 1 கிராம் தங்கம்!