கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக விமானப் போக்குவரத்து சேவை பெரும் மாற்றங்களைச் சந்தித்தது. கடந்த மார்ச் இறுதி வாரம் தொடங்கி சுமார் இரண்டு மாதம் விமானப் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியிருந்தது. பின்னர், கடந்த மே 25ஆம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை மட்டும் தொடங்கியது.
இந்தச் சேவைக்கான கட்டணத்தில் புதிய விதிமுறையை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான டி.ஜி.சி.ஏ. அறிவித்தது. அதன்படி, 40 நிமிடத்திற்கும் குறைவான பயண நேரம் கொண்ட சேவைக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.2,000 தொடங்கி, அதிகபட்சமாக 210 நிமிட பயண நேரமாக சேவைக்கான கட்டணமாக ரூ.18,600 நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த கட்டண விதிகள் ஆகஸ்ட் 24ஆம் தேதிவரை தொடரும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்த கட்டண நடைமுறையை வரும் நவம்பர் 24ஆம் தேதிவரை நீட்டித்து விமானப் போக்குவரத்துறை அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இனி எல்லா இருக்கையும் உங்களோடு தான்' - கோ ஏர் விமானத்தின் புதிய வசதி!